காந்தியின் பொன்மொழிகளை கூறிய உக்ரைன் அதிபர்

Russo-Ukrainian War Ukraine
By Irumporai Jun 04, 2022 10:00 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நேற்றுடன் 100 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் போர் ஓய்ந்த பாடில்லை. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய போது ,மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசினார் அவர் கூறியதாவது ; பலம் என்பது பயம் இல்லாத நிலையில் உள்ளது, நம் உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கையில் அல்ல. முதலில், முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள்,

காந்தியின் பொன்மொழிகளை கூறிய உக்ரைன் அதிபர் | President Of Ukraine Quoting Gandhis Words

பின்னர் அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள், பின்னர் அவர்கள் உங்களுடன் சண்டையிடுகிறார்கள், அனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.இவ்வாறு காந்தியின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேசினார்.

முன்னதாகஉக்ரைனுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் குமார் ஜெயினை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது