ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார் - வெளியான முக்கிய தகவல்

speech PM Modi Putin Inida பிரதமர் மோடி பேச்சு president-of-russia ரஷ்ய அதிபர்
By Nandhini Mar 07, 2022 10:12 AM GMT
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.

இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை உக்ரைன் அதிபரை, போனில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமர் மோடி பேசினார். அப்போது, இந்திய பிரதமர் மோடி, சுமி நகரில் உள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தினார். பிரதமர் மோடி, உக்ரைன் அதிபருடன் 35 நிமிடம் வரை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், தற்போது ரஷ்ய அதிபர் புடினுடன், போனில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த உரையாடலில் உக்ரைன்-ரஷ்யாவுடனான போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும், உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக 50 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.