ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இன்று இறுதி சடங்கு
கடந்த 8-ம் தேதி இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் வயது முதிர்வு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உயிரிழந்தார்.அவருக்கு வயது 96.
அவரது உடல் கடந்த 13-ம் தேதி விமானம் மூலம் இங்கிலாந்து கொண்டு வரப்பட்டது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக் கொண்டனர்.
2ம் எலிசபெத் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிசடங்கு இன்று காலை நடைபெற உள்ளது.
ராணி 2ம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் விரைந்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி
வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணி 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு மக்கள் நீண்ட துாரம் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராணி 2-ம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்தினார். இன்று நடக்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்.