அடுத்த 15 வருடத்திற்கு இவர்தான் அதிபரா? - வெளியான அதிர்ச்சி தகவல்

president russia world putin
By Jon Apr 07, 2021 09:53 AM GMT
Report

ரஷ்யா அதிபர் பதவியில் வரும் 2036ம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் இருப்பதற்கு புதிய சட்டம் அரங்கேறியுள்ளது. 68 வயதாகும் அதிபர் புதின், முதன்முதலில் கடந்த 2000ம் ஆண்டு ரஷிய நாட்டின் அதிபர் பதவியை ஏற்றார். அவரது பதலிகாலம் வரும் 2024ல் முடியவுள்ளது.

இந்த நிலையில் அதிபர் புதின் 2036ம் ஆண்டு வரை தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர தேவையான சட்டத்திற்கு புதின் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா நாட்டு சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது. ஆனால், இந்த சட்டத்தை மாற்றி, புதின் கடந்தாண்டு முன்மொழிந்தார்.

இது குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதையடுத்து இந்தச் சட்டத்திற்கு புதின் நேற்று ஒப்புதல் வழங்கிய நிலையில் அடுத்த இரண்டு தேர்தல்களில் புதினால் தேர்தலில் போட்டியிட முடியும்.

இதனால் புதின் 2036ம் ஆண்டு வரை அதிபர் ரேசில் அவரால் இருக்க முடியும்.உயிருடன் இருக்கும் வரை அதிபர் பதவியில் தொடரவே புதின் இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.