2 நாட்கள் பயணம் - இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு புவனேஸ்வருக்கு வந்தடைந்தார்...!

India Draupadi Murmu Odisha
By Nandhini Feb 10, 2023 07:29 AM GMT
Report

2 நாட்கள் பயணமாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு புவனேஸ்வருக்கு வந்தடைந்தார்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு புவனேஸ்வருக்கு வந்தடைந்தார்

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று காலை புவனேஸ்வர் விமான நிலையத்தை வந்தடைந்தார். ஒடிசா கவர்னர் பேராசிரியர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதியை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

ஜூலை 2022ம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, ஜனாதிபதி முர்மு தனது சொந்த மாநிலத்திற்குச் செல்வது இது 2வது முறையாகும்.

இன்று புவனேஸ்வரில் நடைபெறும் ஞானபிரபா மிஷனின் நிறுவன தின விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள உள்ளார். அதே நாளில், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

நாளை கட்டாக்கில் உள்ள ICAR-தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் 2வது இந்திய அரிசி மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

president-murmu-arrives-in-bhubaneswar