தடுக்கி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்- வெளியான வீடியோ காட்சிகள்

president video usa biden
By Jon Mar 21, 2021 01:48 PM GMT
Report

நம் நாடுகளில் தலைவர்கள் லேசாக தடுமாறினாலே மக்கள் பதறுவார்கள்... ஆனால், நேற்று காலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து மூன்று முறை தடுக்கி விழுந்தும் யாரும் அவரை கண்டுகொண்டது போல் தெரியவில்லை.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அட்லாண்டா செல்வதற்காக விமானம் ஏறும் ஜோ பைடன் தடுமாறி விழ எத்தனிப்பதைக் காணலாம்.

சமாளித்துக்கொண்டு மீண்டும் படியேற, இரண்டாவது முறையும் தடுமாறுகிறார் அவர். மீண்டும் படிக்கட்டுகளில் தொடர்ந்து ஏற, மூன்றாவது முறை தடுமாறி விழுந்தே விடுகிறார்.  

விழுந்து, எழுந்து, பாவம்போல முழங்கால்களை தடவிக்கொண்டு, தொடர்ந்து ஏறி விமானத்தின் கதவுக்கருகே நின்று, ஒரு சல்யூட் வைத்துவிட்டு உள்ளே சென்று மறைகிறார் பைடன்.

அவர் மூன்று முறை தடுமாறியும், மூன்றாவது முறை விழுந்தும் யாரும் அவருக்கு உதவச் சென்றது போல தெரியவில்லை. இன்னொரு விடயம், இந்த செய்தியை அமெரிக்க ஊடகங்கள் எதுவும் தங்கள் பத்திரிகைகளில் முக்கியப்படுத்தவில்லையாம்.  

தடுக்கி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்- வெளியான வீடியோ காட்சிகள் | President Joe Biden Block Officer Video Footage

வெளிநாட்டு ஊடகங்கள்தான் பைடன் விழுந்ததை பெரியதாக செய்தியாக்கியுள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை வட்டாரமோ, பைடன் காற்று பலமாக வீசியதால் தடுமாறியதாக தெரிவித்துள்ளது. சமீபத்தில்தான், தனது நாயுடன் வாக்கிங் சென்ற பைடன் விழுந்து காலை உடைத்துக்கொண்டார்.

இப்போது விமானத்தில் ஏறும்போது, மீண்டும் தடுக்கி விழுந்துள்ளார். இன்னொரு பக்கம் பேச்சில் தடுமாறுகிறார். அமெரிக்க துணை அதிபரை, அதிபர் கமலா ஹாரிஸ் என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, பல சவால்கள் சூழ்ந்துள்ள இந்த காலகட்டத்தில் அமெரிக்காவை வழிநடத்த பைடனின் உடல் நிலை தகுதியாக உள்ளதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதுடைய அதிபர் பைடன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இப்போது 78 வயதாகிறது!  


Gallery