இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? டலஸ் அழகப்பெருமவைக்கு அதிக ஆதரவா?

Dullas Alahapperuma Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Sumathi Jul 19, 2022 12:50 PM GMT
Report

இலங்கையில் பொருளாதாரம் வலுவிலந்ததால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இதனால் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சே, உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டார்.

அதிபர் தேர்தல்

முதலில் மாலத்தீவுக்கும் தற்போது சிங்கப்பூரிலும் கோத்தபாய ராஜபக்சே பதுங்கி உள்ளார். சிங்கப்பூர் சென்ற கோத்தபாய ராஜபக்சே, அங்கிருந்து தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? டலஸ் அழகப்பெருமவைக்கு அதிக ஆதரவா? | President Election Including Ranil Sri Lanka

அத்துடன் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். தாம் பதவியேற்ற உடன் இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்தினார் ரணில் விக்கிரமசிங்கே.

வேட்புமனு

இந்நிலையில், இன்று ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? டலஸ் அழகப்பெருமவைக்கு அதிக ஆதரவா? | President Election Including Ranil Sri Lanka

இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார்.

 வேட்பாளர்கள்

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ நாணயக்கார அதனை உறுதிப்படுத்தினார்.

தற்போது நாளை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவைக்குதான் அதிக ஆதரவு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசாங்கச் சட்டத்தின்படி, அதிபர் பதவி விலகினால் அடுத்தபடியாக இருக்கும் பிரதமருக்குப் பதவி உயர்வு தரப்படும். அவர் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.