சென்னைக்கு முதன் முறையாக வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு - போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் தலைநகரம்..!
இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு சென்னை வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதுமலை செல்லும் ஜனாதிபதி
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் பிற்பகல் 2.55 மணிக்கு மைசூர் செல்லும் அவர்,
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தமிழகத்தில் உள்ள முதுமலை தேசிய வனப்பகுதிக்கு பிற்பகல் 3.35 மணிக்கு செல்கிறார்.
பின்னர் 3.35 மணி முதல் 3.45 மணி வரை ஓய்வு எடுக்கிறார். பின்னர் 3.45 மணி முதல் 4.45 மணி வரை முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி பார்க்கும் அவர் யானை பாகன்களுடன் கலந்துரையாடுகிறார். ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளியை சந்தித்து அவர்களுடன் உரையாட உள்ளார்.
சென்னை வருகிறார்
பின்னர் இன்று மாலை 5 மணிக்கு முதுமலையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூருக்கு செல்லும் அவர் அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை மாலை 6.50 மணிக்கு வந்தடைகிறார்.
சென்னை விமான நிலையம் வரும் ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவர்னர் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளார்.
பின்னர் இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை ராஜ்பவனை அடைகிறார் அங்கு இரவு உணவு அருந்தி விட்டு அங்கேயே தங்குகிறார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.