இன்று மதுரை வருகிறார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, முதன்முறையாக இன்று தமிழகம் வருகிறார், இரண்டுநாள் பயணமாக திரௌபதி முர்மு இன்று காலை மதுரை வருகிறார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் குடியரசுத்தலைவர்
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வரும் அவர் , மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதிகள் பாதுகாப்பு குழுவும் மீனாட்சியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். மீனாட்சியம்மன் கோவில் டைரிசனம் முடித்த பின் அவர் கோவில் அன்னதான நிகழ்ச்சியில் பங்கு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா சிவராத்திரியில் கலந்து கொள்ள கோவை செல்கிறார்
இதன் பிறகு அவர் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கோவை செல்கிறார்.

இதற்காக மதுரை மற்றும் கோவையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் 100கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு வாகன சோதனைகள் எல்லாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்னர் பயணத்தை முடித்துக்கொண்டு குடியரசுத்தலைவர் நாளை காலை டெல்லி செல்வார்.