மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்..!
மதுரை வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
மதுரை வந்தார் குடியரசுத் தலைவர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை வந்ததையடுத்து 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன் முறையாக தமிழ்நாடு வந்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்
மதுரை வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்து வருகிறார். அவருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.