ஜனாதிபதியின் உடல் நிலை சீராக உள்ளது - ராஷ்டிரபதி பவன் தகவல்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களது உடல் நிலை சீராக உள்ளதாக ராஷ்டிரபதி பவன் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு கடந்த மார்ச் 26ம் தேதி இருதய கோளாறு ஏற்பட்டு ராணுவ மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர்.

அதன்படி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மார்ச் 30ம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடைபெறும் என் தெரிவித்தனர். தற்போது அந்த அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், இது தொடா்பாக, ராஷ்டிரபதி பவன் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு செவ்வாய்க்கிழமை காலை இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவா்கள் குழு அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.