இலங்கை அரசியலில் புதிய திருப்பம் : இலங்கையில் தற்காலிக அமைச்சர்கள் பதவியேற்பு

srilanka SriLankaCrisis newminister sriLankaEconomicCrisis
By Irumporai Apr 04, 2022 07:23 AM GMT
Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதன் காரணமாக அங்கு மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொணடார்.

அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களுடன் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்த நிலையில், ராஜினாமா ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியானது

இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தில் அனைத்து கட்சிகளும் பங்கெடுக்குமாறு திபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்த நிலையில் இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்

அந்த வக்லையில் நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனயும் நியமிக்கப்பட்டுள்ளார்  வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம் செய்யப்படுள்ளார்.