அதற்கு மட்டும் மனைவி அனுமதிப்பதே இல்லை - பிரேம்ஜி சோகம்
வீட்டில் பெரும்பாலான முடிவுகளை மனைவிதான் எடுப்பார் என பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
பிரேம்ஜி
நடிகர் பிரேம்ஜி இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் இளைய சகோதரர் ஆவார்.
பிரேம்ஜி பல படங்களில் நடித்துள்ளதோடு, சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கம் பெரும்பாலான படங்களில் நடிக்கும் பிரேம்ஜி கடைசியாக விஜய்யின் கோட் படத்திலும் நடித்திருந்தார்.
பார்ட்டிக்கு அனுமதியில்லை
45 வயது வரை கெத்தாக சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜிக்கு, கடந்த ஜூன் மாதம் இந்து என்ற பெண்ணுடன் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து மனைவியுடன் உள்ள வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "தனக்கு ப்ரை உணவுகள்தான் அதிகம் பிடிக்கும் என்றும், மனைவியை விட நான்தான் சிறப்பாக சமைப்பேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "வீட்டில் பெரும்பாலான முடிவுகளை மனைவிதான் எடுப்பார். முன்னெல்லாம் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி செய்ததாகவும் மனைவி தற்போது அதற்கு மட்டும் அனுமதிப்பதில்லை. 11 மணி ஆகி விட்டாலே போன் செய்து விடுவார்" என தெரிவித்துள்ளார்.