குஷ்புவையும் விட்டுவைக்காத பிரேம்ஜி அமரன் - ட்விட்டரில் செய்த காரியம்
குஷ்புவின் ட்வீட்டுக்கு பிரேம்ஜி அமரன் அளித்த பதிலை பார்த்த இணையவாசிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார். நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே போகும் அவர் அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.
????????? https://t.co/P6XYymg6Ms
— KhushbuSundar (@khushsundar) December 3, 2021
இந்நிலையில் குஷ்பு ஜீன்ஸ், டி சர்ட்டில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த மொரட்டு சிங்கிள் பிரேம்ஜி அமரன் தான் வழக்கமாக போடும் GIF வீடியோவை கமெண்ட் பாக்ஸில் தட்டிவிட்டிருக்கிறார். அதற்கு குஷ்புவும் பதில் அளித்துள்ளார்.
ஆனால் பிரேம்ஜியின் கமெண்ட்டை பார்த்த இணையவாசிகள் இங்கேயும் வந்துட்டீங்களா. நீங்க குஷ்புவையும் விட்டுவைக்க மாட்டீங்க போலயே. கால காலத்துல கல்யாணம் பண்ணுங்க பிரேம்ஜி.
இல்லைனா இப்படித் தான் நடக்கும். உங்கள் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா என கேட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார்.