‘பிரேமம்’ மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது இவர் தான்...!
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது யார் என்ற ரகசியத்தை படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு பிரேமம் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் தமிழ்,மலையாளம் என அனைத்து சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
குறிப்பாகபடத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் அவரது படங்களில் தமிழின் தாக்கம் இருப்பது பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், முதலில் நான் பிரேமம் கதை எழுதிய போது மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசினை நடிக்க வைக்க விரும்பினேன்.
அந்தக் கதையும் மலையாளத்தில் தான் இருந்தது. ஆனால் அசினை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராக மாற்றி எழுதினேன் என கூறியுள்ளார்.