முதன்முறையாக போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு
premalatha vijayakanth
By Fathima
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகள் குறித்த முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், முதன்முறையாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.