திமுக? அதிமுக? கூட்டணி இதுதான்- பிரேமலதா அதிரடி

Premalatha Vijayakanth
By Fathima Feb 12, 2026 07:54 AM GMT
Report

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 25ம் ஆண்டு கொடி நாளை ஒட்டி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக உரிய நேரத்தில் அறிவிக்கும்.

எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த கூட்டணியை விரும்புகிறார்களோ அந்த கூட்டணியைதான் தேமுதிக அமைக்கும்.

எங்களுடைய கட்சி தேமுதிக, என்ன முடிவு எடுக்க வேண்டும், கூட்டணியை எப்போது அறிவிக்க வேண்டும் என நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துதான் செய்ய முடியும் என தெரிவித்தார்.

மேலும் அதிமுக, திமுக இரு கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.