விஜயகாந்த் வீட்டில் துக்கம் - கண்ணீரில் குடும்பம்!

Chennai Death Premalatha Vijayakanth
By Sumathi Oct 07, 2025 05:59 AM GMT
Report

பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார்.

பிரேமலதா தாய் மறைவு

பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தம்பி எல்.கே.சுதீஷ். இவர்களது தாய் அம்சவேணிக்கு அண்மைக்காலமாக வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.

premalatha family

இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இருமல் மருந்து குடித்து பலியான குழந்தைகள் - விசாரணையில் பகீர் தகவல்!

இருமல் மருந்து குடித்து பலியான குழந்தைகள் - விசாரணையில் பகீர் தகவல்!

ஸ்டாலின் இரங்கல்

தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள இரங்கல் செய்தியில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.