ஜெயலலிதாவுக்கு இருக்கும் பக்குவம் எடப்பாடிக்கு இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக - அமமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக அரசியலில் சரித்திரம் படைக்கும். ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
பக்குவமில்லாத முதல்வராக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என விமர்சனம் செய்தார். மேலும் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஏதோ நாங்கள் தொகுதிகளை கேட்டு கெஞ்சுகிறோம் என்றெல்லாம் சிலர் விமர்சித்தனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணிக்கு செல்லவில்லை.பாஜக வழியாக அதிமுக தான் எங்களுடன் கூட்டணி பேச்சுக்கு வந்தது என்றார்.
அதிமுக கூட்டணியில் சுமூகமாக செல்ல வேண்டும் என்பதால் மிகமிக பொறுமையாக, பக்குவமாக இருந்தோம்.கனத்த இதயத்துடன்தான் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் தான் என கூறினார்.