234 தொகுதிகளிலும் தேமுதிக பலமாக உள்ளது: பிரேமலதா விஜய்காந்த்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக அமமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றது. தனித்து போட்டியிடுவோம் எனத் தொடர்ந்து கூறிவந்த தேமுதிக மிக நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு அமமுக கூட்டணியில் 60 இடங்களில் போட்டியிடுகிறது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “தேமுதிக 234 தொகுதிகளிலும் வலுவாக உள்ளது. நாங்கள் இருக்கின்றன் கூட்டணி தான் வெற்றிக் கூட்டணியாக அமையும்” என்றார்.
கூட்டணியில் அமமுகவை விட குறைவான இடங்களில் தேமுதிக போட்டியிடுவதால் டிடிவி தினகரனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் பிரேமலதா.
மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகளில் தெரியும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.