பொதுச்செயலாளரானார் பிரேமலதா விஜயகாந்த்..!! பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!!

Vijayakanth DMDK
By Karthick Dec 14, 2023 06:59 AM GMT
Report

இன்று நடைபெற்று வரும் தேமுதிகவின் பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக பொதுக்குழு கூட்டம்

சென்னை திருவேற்காட்டில் நடிகர் விஜய்காந்த் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்க்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது வருகின்றது.

premalatha-selected-as-general-secretary-of-dmdk

இன்று டிசம்பர் 14 காலை 8.45 மணியளவில் சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜான விஜயகாந்த் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். 

பொதுச்செயலாளராக பிரேமலதா 

அவரின் மகன் விஜய பிராபாகரனும் கலந்துகொள்கிறார். மேலும் பிரேமலதா விஜய்காந்த் கழகத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிக்க வருவதாகவு கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

premalatha-selected-as-general-secretary-of-dmdk

தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தலைவர் விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது பற்றிய முடிவும் எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகிறது. இக்கூட்டத்தில் தலைமை கட்சி நிர்வாகிகள், உயர்மட்ட உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.