மே 4ஆம் தேதி வெற்றிச் செய்தி வரும் - பிரேமலதா விஜயகாந்த் உறுதி!

M K Stalin Tamil nadu DMK Election Premalatha Vijayakanth
By Vinoja May 02, 2026 07:07 AM GMT
Report

ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க வேண்டும். இன்னும் 2 நாள்தான் இருக்கிறது. மே 4ஆம் திகதி வெற்றிச் செய்தி வரும்” என  தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தொடர்ந்து வரும் 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மே 4ஆம் தேதி வெற்றிச் செய்தி வரும் - பிரேமலதா விஜயகாந்த் உறுதி! | Premalatha Said Dmdk Alliance Massive Victory

இதற்கிடையில், கடந்த 29ஆம் திகதி மேற்குவங்கத்தின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்றதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பெரும் குழப்பநிலையை தோற்றுவித்துள்ளது. 

கருத்துக் கணிப்புகளின் பிரகாரத்  திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும், சில கருத்துக் கணிப்புகள் அதிமுக ஆட்சியை பிடிக்கும் எனவும், ஒரு கருத்துக் கணிப்பில் தவெக ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிளளித்த அவர், “ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க வேண்டும். இன்னும் 2 நாள்தான் இருக்கிறது. மே 4ஆம் திகதி  வெற்றிச் செய்தி வரும்” எனத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது; “அனைத்தும் முடிந்திருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது.

மே 4 ஆம் திகதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். எனவே ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க வேண்டும். அதற்கு அதீத எதிர்பார்ப்பும், கற்பனையும் தேவையற்றது. உறுதியாக எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என உறுதியளித்துள்ளார்.