உங்க அட்வைஸுக்கு நன்றி..!! பாத்துக்கோங்க என்ற பாண்டிராஜ்..! கடுப்பான பிரேமலதா..!
விஜயகாந்த் உடல்நலம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார்.
விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, அவரது உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில், அவர் உடல் நலம் பெற்றூ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின், திருவேற்காட்டில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் விஜயகாந்த் கலந்துகொண்டார்.அப்போது 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டார்.
பாண்டிராஜ் வேண்டுகோள்
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாண்டிராஜ் தனது எக்ஸ் தளத்தில், “கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள். please ...? பிடித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
#WATCH | தேமுதிக பொதுக்குழு: நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்த விஜயகாந்தை பதறி பிடித்த நிர்வாகிகள்!#SunNews | #DMDK | #Vijayakanth | #PremalathaVijayakanth | @iVijayakant pic.twitter.com/kDXpg1tdnM
— Sun News (@sunnewstamil) December 14, 2023
பிரேமலதா பதிலடி
இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில், அதற்கு பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு தான் அளித்த பேட்டியில் பேசும் போது, “நாலுக்கு நாலு ரூமில் இப்படி ஒரு கேமராவை வைத்துக் கொண்டு எதைப் பற்றி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது கிடையாது.
கட்சிக்காரர்கள் அத்தனை பேரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தட்டிவிட்டால் பத்திக்கும். மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ ஒரு பதிவு போடணும் என்பதற்காக பதிவிடாதீர்கள். இது சினிமா கிடையாது, கட்சி. எங்களுக்குத் தெரியும் எப்படி அவரை பாத்துக்கணும் என்று. உங்க அறிவுரைக்கும், இலவச அட்வைஸூக்கும் நன்றி மிஸ்டர் பாண்டியராஜன்” எனப் பேசியுள்ளார்.