தவெக ஆட்சியமைக்க தேமுதிக ஆதரவா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
தவெக ஆட்சியமைக்க தேமுதிக ஆதரவளிக்குமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
தவெகவிற்கு 10 எம்எல்ஏக்கள் தேவை
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவை உள்ளது.
இதனால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. விருத்தாசலத்தில் போட்டியிட்ட தேமுதிக பொதுச்செயாளர் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பிரேமலதா விளக்கம்
இந்நிலையில், வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழை பெற்ற பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தவெக ஆட்சியமைக்க தேமுதிக ஆதரவு அளிக்குமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நாங்கள் மதசார்பற்ற கூட்டணியிலே தொடர்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறேன். அதில் மாற்றுக்கருத்து இல்லை. புதிதாக ஆட்சியமைக்க போறவங்களுக்கு எங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
விஜய் எங்களுக்கு புதுசு இல்லை. ஆரம்பகாலத்தில் இருந்தே கேப்டனோடு வாழ்ந்தவர். அவர் எங்கள் பக்கத்து வீடு, எங்கள் வீட்டு பிள்ளைதான்" என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி IBC Tamil
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan