குஷ்பு, பிரேமலதா, சீமான் வெற்றி பெறுவார்களா? வெளியான கருத்துக் கணிப்புகள்
குஷ்பு, சீமான், பிரேமலதா, குஷ்பு உள்ளிட்டோர் வெற்றி வாய்ப்பை இழக்கும் வாய்ப்பு உள்ளதாக தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது குறித்த தனியார் தொலைக்காட்சி. இதில் நட்சத்திர வேட்பாளர்களில் யார் யார் வெல்வார்கள், யார் யார் தோற்க வாய்ப்பு உள்ளது என்பதை வெளியிட்டுள்ளது.
கோவை தெற்கு கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவருக்கு 35 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு 29 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு 24 சதவீதம் பேர் ஆதரவு கிடைத்துள்ளது.

திருவெற்றியூர் திருவெற்றியூர் தொகுதியில் திமுக கூட்டணி 39 சதவீதம் ஆதரவையும், அதிமுக+ 32 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் கட்சி 19 சதவீதம் ஆதரவையும், அமமுக 3 சதவீதம் ஆதரவையும், மநீம 3% ஆதரவையும் பெற்றுள்ளது. இதன் மூலம் திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
அதிமுக வேட்பாளர் குப்பன் இரண்டாம் இடத்தையும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மூன்றாம் இடத்தையும் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

விருத்தாச்சலம் விருத்தாச்சலம் தொகுதியில் அதிகபட்சமாக திமுக கூட்டணிக்கு 43 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் மூலம் அங்கு திமுகவே வெல்லும் என்று கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இங்கு அதிமுக கூட்டணிக்கு 39 சதவீத ஆதரவும், அமமுக கூட்டணியில் போட்டியிடும் பிரேமலதாவிற்கு 11 சதவீதம் ஆதரவு மட்டுமே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பிரேமலதா தோல்வியடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.