பிரேமலதா தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல்: எந்த தொகுதியில் களம் காண்கிறார்?
சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது வரை இழுபறியிலே உள்ளது. பேச்சுவார்த்தை ஒருபக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்த சாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தேமுதிக விருப்பமனு விநியோகம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயபாஸ்கரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்தனர்.
விருதாச்சம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்த அவர்கள், விருகம்பாக்கத்தில் பிரேமலதாவும், அம்பத்தூரில் விஜயபிரபாகரனும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். இதனால் பிரேமலதா விருகம்பாக்கத்தில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.