கேப்டனுக்கு பத்மபூஷன் விருது மறுப்பா? விஷயத்தை போட்டுடைத்த பிரேமலதா
அண்மையில் வழங்கப்பட்ட விருது விழாவில், கேப்டன் விஜயகாந்தின் பெயர் இல்லாததை தொடர்ந்து நிறைய கேள்விகள் எழுந்தன.
மறுப்பா?
அவருக்கு பத்மபூஷன் விருது மறுக்கப்பட்டதா..? என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்தன. இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பிறகு பேசிய அவர், சென்ற வாரம் அழைப்பு வரவில்லை என்று கூறி, விருது வழங்கிய ஹால் மிகவும் சிறியது என்பதால் 3, 4 பிரிவுகளுக்கு மட்டுமே விருது அளித்துள்ளார்கள்.
இது குறித்து 3 நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சகத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கூறி, வரும் 9ஆம் தேதி கேப்டனுக்கு பத்மபூஷன் விருதை வழங்க உள்ளார்கள் என தெரிவித்தார்.
ஓட்டு போடமாட்டார்கள்
மேலும், தன்னை 8ஆம் தேதி இரவே வந்துவிடும் படி கூறியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் எத்தனை பேர் ஓட்டு போட்டீர்கள் என்ற கேள்வியை தான் எழுப்புகிறேன் என்று வினவி, தமிழகத்திலேயே சென்னையில் தான் வாக்குப்பதிவு குறைவான அளவில் நடந்திருப்பது நமக்கு தலைகுனிவு என்றார்.
ஆனாலும், பீச், பார்க், கிளப் போன்ற இடங்களில் அரசியல்தான் பேசுகிறார்கள் என்றும் ஆனால் ஓட்டு மட்டும் போடமாட்டார்கள் என்று விமர்சித்து, வெறும் கருத்துகளை சொல்வதை விட்டுவிட்டு ஜனநாயக கடமை ஆற்றுவது அவசியம் என குறிப்பிட்டார் பிரேமலதா.