கிரகண மூடநம்பிக்கையை ஒழிப்போம்... - கர்ப்பிணி பெண்கள் சிற்றுண்டி சாப்பிட ஏற்பாடு செய்த திராவிடர் கழகம்..!
திராவிடர் கழகத்தின் கிரகண மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக, கர்ப்பிணி பெண்கள் சிற்றுண்டி சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சூரிய கிரகணம்
இந்தியாவில் இன்று சூரிய கிரகணம் 1 மணி 45 நிமிடங்கள் நீடிக்கும் என்று அறிவியலாளர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கி, 6.27 மணி வரையில் நிகழவுள்ளது.
குஜராத்தின் துவாரகா நகரில் அதிகபட்சமாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மும்பையில் 1 மணிநேரம் 19 நிமிடங்களும், சென்னையில் சூரிய கிரகணம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று தகவல் கொடுத்தனர்.
இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது என்றும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்க வேண்டும என்று அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
திராவிடர் கழகத்தின் கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு
இந்நிலையில், சூர்ய கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற மூட நம்பிக்கையை முறியடிக்கும் வகையில், பெரியார் திடலில் இன்று மாலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், கர்ப்பிணி பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து திராவிட கழகம் தெரிவிக்கையில், 2019ம் ஆண்டு சூரிய கிரகணத்தன்று நடந்த நிகழ்வில், கர்ப்பிணியாக பங்கேற்ற சீர்த்தி என்ற பெண்ணுக்கு 2020 ஜூன் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்து, தற்போது இருவரும் நலமாகவே உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.