முழு பிரசவ அறை வசதியுடன் மருத்துவமனை; வர மறுக்கும் கர்ப்பிணிகள் - கிராம மக்களின் மூட நம்பிக்கை!

Karnataka India
By Jiyath Jan 13, 2024 06:17 AM GMT
Report

பிரசவ அறையுடன் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப மருத்துவமனைக்கு மூட நம்பிக்கையால் கிராம மக்கள் வர மறுக்கின்றனர்.

மூட நம்பிக்கை

கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தில் 20,000 மக்கள் தொகை கொண்ட 'பகடல்' என்ற கிராமம் உள்ளது.

முழு பிரசவ அறை வசதியுடன் மருத்துவமனை; வர மறுக்கும் கர்ப்பிணிகள் - கிராம மக்களின் மூட நம்பிக்கை! | Pregnant Women Refuse To Come To Govt Hospital

இங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, சுற்றியுள்ள 20 கிராமங்கள் பயன்பெறும் வகையில் முழு வசதியுடன் கூடிய பிரசவ அறையுடன் அரசு ஆரம்ப மருத்துவமனை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு குழந்தை கூட இந்த மருத்துவமனையில் பிறக்கவில்லை.

இந்த மருத்துவமனை கல்லறைக்கு அருகிலேயே கட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த கட்டிடத்தில் பிறக்கும் குழந்தைகள் இறுதியில் பேய்களாக சுற்றித்திரியும் என்ற மூட நம்பிக்கையால், இந்த மருத்துவமனையை கிராம மக்கள் பிரசவங்களுக்கு விரும்புவதில்லை.


யாரும் வருவதில்லை..!

இதற்கு மாறாக 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முந்தைய மருத்துவமனை கட்டிடத்திற்குச் செல்கின்றனர்.

முழு பிரசவ அறை வசதியுடன் மருத்துவமனை; வர மறுக்கும் கர்ப்பிணிகள் - கிராம மக்களின் மூட நம்பிக்கை! | Pregnant Women Refuse To Come To Govt Hospital

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக மருத்துவ அதிகாரி டாக்டர் சந்தீப் கோடே கூறுகையில் "இந்த சுற்றுவட்டாரத்தில் சிறந்த வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையாக இருந்தாலும் குழந்தைகள் பிரசவத்திற்காக யாரும் இங்கு வருவதில்லை.

2 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இந்த கட்டடம் குறைந்தது 20 கிராமங்களுக்கு சேவை செய்யும் வகையில் கட்டப்பட்டு உள்ளது" என்றார்.