கர்ப்பிணி பெண் மீது கொடூர தாக்குதல் - 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பாலக்கோடு அருகே கர்ப்பிணி பெண் உட்பட 3 பேரை கொடூரமாக தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ரவி ,52 இவர் அப்பகுதிக்கு ஊர்கவுண்டராக இருந்து வருகிறார்.
இவரது தம்பி நந்தன்,கடந்த வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், என்கிற வாலிபரிடம் தகராறு செய்துள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இச்சம்வம் குறித்து ஊர்கவுண்டர் ரவி தலையில் பஞ்சாயத்து பேச சந்தோஷின் குடும்பத்தினரை அழைத்துள்ளனர்.
அங்கு வந்த சந்தோஷ்சை ரவி,நந்தன் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த சந்தோஷின் தாய் குள்ளம்மாள், மற்றும் 5 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவி ரஞ்சிதா,ஆகியோரையும் கீழே தள்ளி தக்கி உள்ளனர்.
இதில் காயமடைந்த சந்தோஷ் உட்பட மூன்று பேரும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சந்தோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஊர்கவுண்டர் ரவி, நந்தன்,கோகுல் உள்ளிட்ட,10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.