ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - கத்தியதால் கீழே தள்ளிய கொடுமை!
கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் மருத்துவ பரிசோதனைக்காக ஆந்திரா செல்வதற்காக கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது கழிவறைக்கு சென்றுள்ளார்.
அங்கு போதையில் இருந்த சிலர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். உடனே இவர் கூச்சலிட்டதில், அந்த நபர்கள் இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, தப்பி சென்றுள்ளனர். பின் தண்டவாளத்தின் அருகே படுகாயத்துடன் இருந்த இளம் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தீவிர சிகிச்சை
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
தொடர்ந்து கே.வி.குப்பத்தை அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.