7 மாத கர்ப்பிணி மகளுக்கு தந்தை செய்த கொடூரம் - பதைபதைக்க வைக்கும் சம்பவம்
கர்ப்பிணியை பெற்ற தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.
சாதி எதிர்ப்பு
கர்நாடகா, இனாம் வீராபூர் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்ற இளைஞர், ஹூப்பள்ளியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த மான்யா பாட்டீல் என்பவரும் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில், அது காதலாக மாறியுள்ளது. இது, பெண் வீட்டாருக்கு தெரிந்ததும் கண்டித்துள்ளனர்.
அதிலும், இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிப்பு கிளம்பியுள்ளது. எனவே விவேகானந்தன் காதலியிடம் இருந்து விலகிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மான்யா கூறியுள்ளார்.
தந்தை வெறிச்செயல்
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நிலையில், மான்யா பாட்டீல் 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். பின் காவேரி மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில், இனாம் வீராபூர் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து பெண்ணின் தந்தை பிரகாஷ், தனது உறவினர்களுடன் விவேகானந்தனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மான்யா மற்றும் அவரது மாமனார், மாமியார் மட்டும் இருந்துள்ளனர். இரும்பு பைப் மற்றும் மண்வெட்டியைக் கொண்டு கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.
உடனே அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தந்தை பிரகாஷ் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.