வலியால் துடித்த கர்ப்பிணி பெண் - தோளில் சுமந்து காப்பாற்றிய ராணுவ அதிகாரி

By Pavi Feb 11, 2026 01:39 PM GMT
Report

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தி கடும் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ராணுவத்தினர் காப்பாற்றி உள்ளனர்.

காஷ்மீர்

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா பகுதியில் எப்போதும் கடும் பனிப்பொழி இருக்கும். இந்த நிலையில் இங்கே ஜப்தி பிஜல்தார் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடித்தார். 

அந்த நேரத்தில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் அந்தப் பகுதி முற்றிலும் மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தது. பல அடி உயரத்திற்கு பனி குவிந்ததால் சாலைகள் மூடப்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வலியால் துடித்த கர்ப்பிணி பெண் - தோளில் சுமந்து காப்பாற்றிய ராணுவ அதிகாரி | Pregnant Woman In Pain During Snowfall Helps Army

இப்படி இருக்க அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, கொனகப்ரா அருகே ஆம்புலன்ஸ் பனியில் சிக்கியது. கர்ப்பிணி பெண் கடும் வலியால் அலறி துடித்துக் கொண்டிருந்தார்.

இதை அறிந்த இந்திய ராணுவத்தின் டாங்தார் துணைப் பிரிவு தலைமையகத்திலிருந்து 104வது படைப்பிரிவு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். 

அவர்கள் கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தோளில் சுமந்து பல கிலோமீட்டர் தூரம் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செர்த்தனர். 

வலியால் துடித்த கர்ப்பிணி பெண் - தோளில் சுமந்து காப்பாற்றிய ராணுவ அதிகாரி | Pregnant Woman In Pain During Snowfall Helps Army

அங்கு தயார் நிலையில் இருந்த JCB இயந்திரம் பாதையை சுத்தம் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தது.

இதை தொடர்ந்து ராணுவம், காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்தப் பெண் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களின் இந்த செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.