அறுவை சிகிச்சை... திடீர் மின்தடை - அலைக்கழிப்பில் கர்ப்பிணி பலியான சோகம்!
மின்தடை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் வேறு மருத்துவமனைக்கு கர்ப்பிணியை அனுப்பிய துயர சம்பவம் நடந்துள்ளது.
கர்ப்பிணி பெண்
கோவை, அன்னூரை அடுத்துள்ள ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வான்மதி. கர்ப்பிணியான தனது மனைவியை அழைத்து வந்துள்ளார்.
அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவமனையில் திடீர் மின்தடை ஏற்பட்டது. ஜெனரேட்டரும் வேலை செய்யாததால் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை உருவானது.
திடீர் மின்தடை
இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், அவரது உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு அன்னூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாடு காரணம் என குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து அறிந்த வருவாய் கோட்டாட்சியர் பூமா தலைமையில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்திரா, வட்டாட்சியர் சிவக்குமார்,டிஎஸ்பி பாலாஜி உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.