சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: அடுத்து நடந்த ஆச்சரியம்
தமிழகத்தின் ராமநாதபுரத்தில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ராமநாதபுரம் சத்திரகுடியை சேர்ந்தவர் மங்களேஸ்வரி, நிறைமாத கர்ப்பிணியான இவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை நோக்கி நடந்து சென்ற போது, திடீரென இடுப்பு வலி வந்துள்ளது.

இதனால் ஒரிடத்தில் அமர்ந்துள்ளார், இதை கவனித்த அங்கிருந்த இரு பெண்கள் அவருக்கு உதவிய நிலையில் அங்கேயே குழந்தை பிறந்துள்ளது.
அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் படி, Child Care Ambulance வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பானது.
