உக்ரைன் ராணுவ வீரரை பார்த்ததும் ஓடிவந்து கட்டியணைத்த கர்ப்பிணி மனைவி - நெகிழ்ச்சி வீடியோ
ராணுவ வீரரான கணவரை பார்த்ததும் மனைவி கட்டியணைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கர்ப்பிணி மனைவி
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடங்கி ஒரு வருடம் ஆகபோகும் நிலையிலும் இன்றும் முடிந்தபாடில்லை. உலக நாடுகள் இதனை எச்சரித்தும் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. இதனால் லட்ச கணக்கான வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

இதற்கு நடுவே பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தனது காதல் மனைவியைக் காணவரும் காட்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
நெகிழ்ச்சி வீடியோ
அவர் தனது மனைவியைப் பார்த்ததும் அவர் மனைவி அவரை நோக்கி ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்கிறார். இருவரும் கண்ணீருடன் காதலைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
அந்த வீடியோவில் மனைவி 30 வார குழந்தையுடன் கருவுற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.