கர்ப்பமான காதலியின் வயிற்றை கத்தியால் குத்தி.. குத்தி... கிழித்த கொடூரக் காதலன் - 14 ஆண்டு சிறை - நீதிமன்றம் அதிரடி
அமெரிக்கா, நியூயார்க் மாகாணம், பொர்ன்க்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆஸ்கர் அல்வெஸ். இவரும், அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த லிவ் அப்ரு என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் லிவ்-இன் முறை வாழ்ந்து வந்தனர்.
இவர்களின் உறவில் கடந்த 2018ம் ஆண்டு லிவ் அப்ரு கருவுற்றாள்.
இதை அறிந்த ஆஸ்கர் அல்வெஸ் இந்த கர்ப்பத்தை நம்பவில்லை. உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை, நீ வேறு யாருடனோ உறவு வைத்து கர்ப்பமாகியுள்ளாய் என்று தெரிவித்து வந்தார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நள்ளிரவு இவர்கள் இருவரும் இந்த விவகாரம் தொடர்பாக பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஆஸ்கர் கத்தியை எடுத்து 26 வார கர்ப்பிணியாக இருந்த காதலி லிவ் அப்ருவை சரமாரியாக வயிற்றில் குத்தி கிழித்தார். லிவ் அப்ரு ரத்த வெள்ளத்தில் சரிந்து அலறி கத்தி கீழே சரிந்தார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்த ஆஸ்கர் அல்வெஸ் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் லிவ் அப்ருப்பை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கத்தியின் ஆழம் வயிற்றில் அதிகமாக தாக்கியதால், கரு கலைந்தது.
பிறகு, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஸ்கர் அல்வெஸை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கர்ப்பிணி காதலியை கத்தியால் குத்திய ஆஸ்கரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan