கர்ப்பிணியாக வாழ முயன்ற டிக்டாக் பிரபலத்திற்கு நேர்ந்த கதி...!
ஆஸ்திரேலியாவின் டிக்டாக் பிரபலம் ஒருவர் கர்ப்பிணி போல் இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் மெயிட்லாண்ட் ஹான்லே என்பவர் கர்ப்ப காலத்தில் பெண்கள் எவ்வாறான சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள விரும்பியுள்ளார்.
குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளை பெண்கள் அறிந்து மகிழும் வேளையில், இந்த காலக்கட்டத்தில் அவர்கள் கடுமையான சிரமங்களையும் அனுபவிப்பார்கள். இதன் காரணமாக 9வது மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் இருப்பது போல் ஒருநாள் வாழ ஆசைப்பட்டுள்ளார். அதன்படி அவர் எடுத்த வித்தியாசமான முயற்சிகள் அடங்கிய வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதில் ஒரு பெரிய தர்பூசணியை எடுத்து தனது வயிற்றில் கட்டிக்கொண்டார். மேலும் கர்ப்ப காலத்தில் மார்பகங்கள் பெரிதாகும் என்பதால் தனது மார்பில் சிறிய அளவிலான இரண்டு தர்ப்பூசணிகளை கட்டிக்கொண்டார். அதன்பின் ப்ளாஸ்டிக் டேப்பை கொண்டு உடல் முழுவதும் கட்டிக்கொண்டு நேராக படுக்கைக்கு சென்று படுத்துவிட்டார்.
தன்னை ஒரு கர்ப்பிணி பெண் போல் பாவித்துக்கொண்டு படுக்கையில் இருந்து பலமுறை எழுந்திருக்க முயன்றும் தோற்றுப்போனார். சொல்லப்போனால் அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. இதுகுறித்து பேசியுள்ள மெயிட்லாண்ட் ஹான்லே, கர்ப்பிணியாக இருப்பது சிரமம்தான் என தெரிவித்துள்ளார்.