பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்!!
cow
baby shower
preganant
fest
By Anupriyamkumaresan
புதுக்கோட்டை மாவட்டம் மூங்கித்தாம்பட்டி கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்க்கும் மாடு ஒன்று தற்போது சினையாக உள்ளது.
அந்த மாட்டிற்கு பெண்களுக்கு நடத்தும் வளைகாப்பு விழாவினை போல் நடத்த வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அதன்படி அந்த கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சினையாக உள்ள பசுமாட்டை அழைத்து சென்று ஊரறிய வளைகாப்பு நடத்தியுள்ளார்.
இவரது அழைப்பை ஏற்று ஊர் பொதுமக்களும் விழாவில் பங்கேற்றனர். அங்கு வந்த அனைவரும்,
சினை மாட்டின் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து கொம்பில் வளையல் அணிவித்து மகிழ்ந்தனர். மேலும் இந்த விழாவில், பங்கேற்ற அனைவருக்கு மீனாட்சி சுந்தரம்
குடும்பத்தினர் விருந்தளித்தனர்.