மனித குலத்தின் அழிவு ஆரம்பம் - பாபா வாங்கா 2026 பகீர் கணிப்புகள்

Baba Vanga World
By Sumathi Nov 25, 2025 05:36 PM GMT
Report

பாபா வாங்கா 2026 கணிப்புகள் பகீர் கிளப்பியுள்ளது.

பாபா வாங்கா

பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.

baba vanga

அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. 1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.

குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சில சம்பவங்கள் நடைபெறும் என இவர் ஏற்கனவே கணித்து வைத்துள்ளார்.

பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் - வைரலாகும் வினோத கிராமம்!

பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் - வைரலாகும் வினோத கிராமம்!

2026 கணிப்பு

அதன்படி, 2026-ஆம் ஆண்டில் ஒரு பெரும் உலகப் போர் தொடங்கும். உலகின் முக்கிய வல்லரசுகள் இந்த போரில் ஈடுபடும். உலகெங்கும் உள்ள கண்டங்களில் இந்த போர் முழுவதும் பரவும். பூமியில் ஒரு மாபெரும் இயற்கை பேரழிவு தாக்கும்.

மனித குலத்தின் அழிவு ஆரம்பம் - பாபா வாங்கா 2026 பகீர் கணிப்புகள் | Predictions Of Baba Vanga For 2026

இந்த பேரழிவால் பூமியின் 7-8 சதவீதம் நிலப்பரப்பு பாதிக்கப்படும். பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் என நிலைமை மோசமாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு வேறு புதிய எல்லைகளைத் தொடும்.

முக்கிய முடிவுகள், தொழில் சார்ந்த முடிவுகளையும் கூட ஏஐ எடுக்க ஆரம்பிக்கும். மனிதர்களின் வாழ்க்கையையும் கூட ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அளவுக்கு வளர்ச்சி அடையும் என கணித்துள்ளார்.