வெஸ்ட் இண்டீஸ் உடனான முதல் ஒருநாள் போட்டி: ஆடும் இந்திய அணி இதுதான்...!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.
இதில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி முதன்முறையாக ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் சாதரண வீரராக விளையாட உள்ளதால் இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முதல் ஒருநாள் போட்டியில் அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால், சுப்மன் கில் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் சாஹர், வாசிங்டன் சுந்தர், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்களுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.