இந்திய அணியில் மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம் - கடைசி போட்டியில் இவர்களுக்கு மட்டுமே இடம்..!

viratkohli klrahul INDvSA SAvIND
By Petchi Avudaiappan Jan 22, 2022 11:59 PM GMT
Report

தென்னாப்பிரிக்க அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதல் போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது.

இதனிடையே இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும் இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை முழுமையாக இழந்துவிடும் என்பதால் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற இந்திய அணி நிச்சயம் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது.கடந்த இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படாத ருத்துராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், பிரசீத் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. 

ஒரு்வேளை த்துராஜ் கெய்க்வாட்டிற்கு அணியில் இடம் கிடைத்தால் ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்காது.அதே போல் கடந்த இரண்டு போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத வெங்கடேஷ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவிற்கு இடம் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

அதேசமயம் பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வரும் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் சாஹருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. பும்ராஹ்வின் பனிச்சுமையை குறைப்பதற்காக பும்ராஹ்விற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவரது இடத்தில் பிரசீத் கிருஷ்ணா களமிறக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் அணியில் ஷிகர் தவான், கே.எல் ராகுல், விராட் கோலி, ருத்துராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திர அஸ்வின், தீபக் சாஹர், பிரசீத் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.