சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இரண்டு வீரர்கள் நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி..!
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டின் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது.
முதல் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதிய சென்னை அணி மோசமாக விளையாடி தோல்வியுற்றது. முதல் போட்டியில் வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத நிலையில் அடுத்த போட்டியில் அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெறும் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் விளையாடும் உத்தேச வீரர்களின் விவபரங்களை தற்போது பார்க்கலாம். துவக்க வீரர்களாக டேவன் கான்வே,ருத்துராஜ் கெய்க்வாட் களம் இறங்க உள்ளனர்.
மிடில் ஆர்டரில் விளையாடும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசா கிடைக்காததால் முதல் போட்டியில் விளையாடாத மொயின் அலி இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொயின் அலி இந்த போட்டியில் விளையாட வாய்ப்பிருப்பதால் மிட்செல் சாட்னர் அணியில் இருந்து நீக்கப்படுவார். அதே போல் சிவம் துபேவிற்கும் இந்த போட்டிக்கான சென்னை அணியில் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.