தவறான கருத்துக்கணிப்பு - டிவி நேரலையில் கதறி அழுத நிர்வாக இயக்குனர்
கருத்து கணிப்பு தவறானதால் டிவி நேரலையில் நிர்வாக இயக்குனர் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.
பிரதீப் குப்தா
ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் குப்தா. இந்நிறுவனம் பிரபல இந்திய ஊடகமான இந்தியா டுடே இணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக் கணிப்புகளின்படி, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 361-401 இடங்களைக் கைப்பற்றும் என்றும், இந்திய கூட்டணி 131-166 இடங்களை கைப்பற்றும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 8 முதல் 20 இடங்களை வழங்கியது என்று கருத்து கணிப்பு தெரிவித்தது.
தவறான கருத்துக்கணிப்பு
இன்று வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்தியா டுடே நேரலை விவாதம் நடத்தியது. இதில் ஆக்சிஸ் மை இந்தியா நிர்வாக இயக்குனர் பிரதீப் குப்தா கலந்து கொண்டார்.
தற்போதைய கள நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 296 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 230 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 17 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பாஜக சரிவை சந்தித்துள்ளது. இந்தியா டுடே நேரலை விவாதத்தின்போது கருத்து கணிப்பு குறித்து பிரதீப் குப்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
Pradeep Gupta crying. ?? pic.twitter.com/kRRRNv3fsc
— Mohammed Zubair (@zoo_bear) June 4, 2024
தொடர்ந்து பதில் அளித்த வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தனது நிறுவனத்தின் கருத்து கணிப்பு தவறாகிவிட்டதே என கதறி அழ தொடங்கிவிட்டார். விவாதத்தை நடத்தியவர் ஆறுதல் கூறிய போதிலும் பிரதீப் குப்தாவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.