மிரட்டும் மழை .. கலக்கத்தில் பொதுமக்கள் : ஆலோசனையில் முதலமைச்சர்

M K Stalin DMK
By Irumporai Nov 01, 2022 04:46 AM GMT
Report

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளது, சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது.

முதலமைச்சர் ஆலோசனை

இந்த நிலையில் பருவமழை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் .

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி உள்ள நிலையில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது .

மிரட்டும் மழை .. கலக்கத்தில் பொதுமக்கள் : ஆலோசனையில் முதலமைச்சர் | Precautionary Measures Cm Mk Stalin

காணொலி காட்சி மூலம் கூட்டம்

இதனால் பருவ மழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார் .

அந்த வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.