குறி கேட்க வருவோருக்கு சரக்கை குடிக்க வைத்து குறி சொல்லும் சாமியார் : வெளியான அதிர்ச்சி காட்சிகள்

preacher kanjipuram TNPolice
By Irumporai Sep 05, 2021 08:26 PM GMT
Report

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, குறி கேட்க வரும் நபர்களை முழு பாட்டில் மதுவை குடிக்க வைத்து, குறி சொல்லி அனுப்பும் சாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக நாம் கேள்விபட்ட சாமியார்கள் ஆடிப்பாடி சொல்பவர்கள்ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சுங்கச்சாவடி அருகே உள்ள நெமிலி கிராமத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணி என்பவர் கடந்த பத்து வருடங்கள் முன்பு ஆலயம் அமைத்து செவ்வாய்கிழமை ரூ300 மற்றும் புதன்கிழமை என்றால் சிறப்பு காணிக்கையாக ரூ1000 என பெற்று கொண்டு குறி என்ற ஜோசியம் கூறிவருகிறார்.

குறி கேட்க வருவோருக்கு சரக்கை குடிக்க வைத்து குறி சொல்லும் சாமியார் : வெளியான அதிர்ச்சி காட்சிகள் | Preacher Ask For The Sign To Drink

இந்நிலையில், ஜோசியம் பார்க்க வந்த ஒருவரை, முழு பாட்டில் மதுவை ஒரே மூச்சில் குடிக்க வைத்து, குறி கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுபோன்று மது அருந்தினால் இவரை உடல்நிலை அபாயநிலைக்கு செல்லும் என அறியாது அவரும் அருந்து நிகழ்வு உயிர்பயத்தை ஏற்படுத்துகிறது.

குறி கேட்க வருவோருக்கு சரக்கை குடிக்க வைத்து குறி சொல்லும் சாமியார் : வெளியான அதிர்ச்சி காட்சிகள் | Preacher Ask For The Sign To Drink

இதை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பணிவுடன் பார்த்து கொண்டு இருப்பதுதான் வேதனையின் உச்சமாக உள்ளது ,ஆகவே  உடனடியாக இதுகுறித்து காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.