திருவாரூரில் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சாமியார் கைது...!
வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்த சாமியார் ஒருவர் கடன் கேட்டு வங்கி ஊழியர்களை மிரட்டிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி முனையில் மிரட்டிய சாமியார் கைது
திருவாரூர் மாவட்டம் அருகே மூலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் திருமலைசாமி. இவர் இடி மின்னல் சங்கம் என்கிற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். நேற்று மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்குள் சாமியார் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
நீண்ட காலமாக கடன் கேட்டு வரும் எனக்கு ஏன் கடன் கொடுக்கவில்லை எனக் கூறி வங்கியில் உள்ளவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டினார். பின்னர், தரையில் அமர்ந்து சாமியார் புகை பிடித்துள்ளார்.
இதை வங்கியில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, நேற்று சாமியாரை போலீசார் கைது செய்தனர்.