28 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடி கட்டடம் - அசத்திய சீனா

China PRE FABRICATION building
By Petchi Avudaiappan Jun 20, 2021 11:35 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 சீனாவில் ஏறத்தாழ ஒரே நாளில் 10 மாடிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சாங்சா என்ற நகரத்தில் பிராட் குரூப் என்ற நிறுவனம் PRE FABRICATION என்ற முறையில் முன்னரே தயாரிக்கப்பட்ட கட்டுமான தொகுப்புகளை கொண்டு இந்தக் கட்டடத்தைக் கட்டி முடித்துள்ளது.

கிட்டத்தட்ட 28 மணிநேரம் 45 நிமிடங்களில் முழு கட்டுமானமும் முடிவடைந்த நிலையில் அதன் காட்சித் தொகுப்பை கட்டுமான நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.