இறந்த 18 வயது மகளை வினோதமான முறையில் உயிர்ப்பிக்க முயற்சித்த பெற்றோர்
இறந்த 18 வயது மகளை வினோதமான முறையில் உயிர்ப்பிக்க முயற்சித்த பெற்றோர்
உத்தரபிரதேசத்தில் இறந்துப்போன 18 வயது மகளின் உடலை வீட்டினுள் பூட்டிவைத்து பிளாக் மேஜிக் மூலம் உயிர்ப்பிக்க பெற்றோர்கள் முயற்சித்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிராம மக்கள் கொடுத்த புகார்
உத்தரப்பிரதேச மாநிலம் கர்ச்சனா மாவட்டம் தீஹா கிராமத்தில் இருந்த ஒரு குடும்பத்தில் 18 வயதுடைய தீபிகா யாதவ் என்ற பெண் சில நாட்களுக்கு முன்னர் சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு எந்த ஒரு இறுதி சடங்கும் அவரது பெற்றோர்கள் செய்யவில்லை. இந்நிலையில் அவர்கள் வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த கிராம மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இறந்த மகளை உயிர்பிக்கும் முயற்சி
சில நாட்களுக்கு முன்னர் இறந்துப்போன 18 வயதான தீபிகா யாதவின் பெற்றோர் வீட்டிற்குள் அவரது இறந்த உடலை பூட்டிவைத்து பிளாக் மேஜிக் செய்து அவரை உயிர்பிக்க முயற்சித்துவந்துள்ளனர்.
இதற்காக கங்கா நதியின் நீர் மற்றும் சூனியத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்ற பலவற்றையும் உபயோகப்படுத்தியுள்ளனர்
மகளின் திடீர் மரணத்தினால் வருத்தமடைந்த பெற்றோர், அவரது இழப்பை தாங்கமுடியாமல் இப்படி முயற்சி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி
இறந்த உடலை சில நாட்களாக வீட்டில் வைத்திருந்ததால் அந்த குடும்பத்தில் இருந்த 11 பேருக்கு உடல் நிலை மோசமடந்துள்ளது. அவர்களை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அதில் ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது