இறாலில் கருப்பு நரம்பை நீக்காவிட்டால் என்ன நடக்கும்?

Healthy Food Recipes Fish Life Style
By Sakthi Raj Feb 06, 2026 07:17 AM GMT
Report

மனிதர்களுக்கு பல்வேறு வகையான உணவுகளை ருசிப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதில் மிக முக்கியமாக கடல் சார்ந்த உணவுகளை பலரும் விரும்பி சாப்பிடுவீர்கள். அதில் இறால் மீன் ஒரு தனி சுவையையும் எல்லோரும் மனதிலும் ஒரு தனி இடத்தையும் பிடித்திருக்கிறது. ஆனால் இந்த இறால் மீன் சமைக்கும் பொழுது நாம் நிறைய விஷயங்களை பின்பற்ற வேண்டியதும் இருக்கிறது.

அப்படியாக இறால் உணவை சமைக்கும் பொழுது சரியான முறையில் நாம் அதை சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக அதில் இருக்கக்கூடிய கருப்பு நரம்பை நாம் அகற்றி விட வேண்டும். அதுதான் இறாலின் செரிமான பாதையாகும்.

இறாலில் கருப்பு நரம்பை நீக்காவிட்டால் என்ன நடக்கும்? | Prawns Shouldnt Be Cook Without Removing Blackvein

இதயத்தை பலப்படுத்தும் சிறந்த உணவு.. என்ன தெரியுமா?

இதயத்தை பலப்படுத்தும் சிறந்த உணவு.. என்ன தெரியுமா?

அந்த செரிமான பாதை எனப்படும் கருப்பு நரம்பில் இறாலின் செரிக்கப்படாத உணவுகள் மற்றும் அதன் கழிவுகள் இருக்குமாம். என்னதான் நாம் வெப்பத்தில் வைத்து சமைத்தாலும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் என்று நம்பினாலும் இறால் அதனுடைய நறுமணம் கெடாமல் இருக்க வேண்டும் மேலும் கருப்பு நரம்புகளை நாம் நீக்காமல் சமைத்து சாப்பிடும் பொழுது ஒரு சில பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரும்.

அதில் ஒன்றுதான் செரிமானம் சார்ந்த பிரச்சனையாகும். சில நேரம் இறால் சாப்பிட்ட பிறகு ஒரு சிலருக்கு வாந்தி போன்ற ஒவ்வாமைகள் வரலாம். மேலும் இறாலில் நாம் எப்படி கருப்பு நரம்பு நீக்கப்பட வேண்டுமோ அதை போல் அதனுடைய வயிற்று ரத்த நரம்பும் அகற்றி விட வேண்டும்.

இறாலில் கருப்பு நரம்பை நீக்காவிட்டால் என்ன நடக்கும்? | Prawns Shouldnt Be Cook Without Removing Blackvein

ஹோட்டல்களில் உணவிற்கு பிறகு பெருஞ்சீரகம் கொடுப்பது ஏன் தெரியுமா?

ஹோட்டல்களில் உணவிற்கு பிறகு பெருஞ்சீரகம் கொடுப்பது ஏன் தெரியுமா?

இறாலை சுத்தம் செய்யும் பொழுது அதனுடைய தலை, கால் மற்றும் ஓட்டை முற்றிலுமாக அகற்றி விடுங்கள். பிறகு அதன் பின்புறம் ஆழமில்லாத வெட்டு போடுங்கள். பின்னர் நன்றாக தண்ணீரில் அலசி அதன்பினர் சமைக்க தொடங்கினால் இறலால் ஏற்படக்கூடிய எதிர்வினை பாதிப்புகள் விலகும்.

மேலும் இறாலில் கொழுப்புகள் மிகவும் குறைவாகவும் ஒமேகா மூன்று அதிகம் இருக்கிறது. அதனால் இது நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. அதனால் இறால் மீனை சரியாக சுத்தம் செய்து சாப்பிடும் பொழுது நிச்சயம் நமக்கு நல்ல ஆரோக்கியமான உடலும் இதயமும் கிடைக்கிறது.